ரமணா பாணியில் புள்ளிவிபரங்களை எடுத்து வைத்த ராமதாஸ் : இளைஞர்களுக்காக தமிழக அரசுக்கு முன்வைத்த கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
18 September 2021, 10:30 am
Quick Share

புதிய பணியிடங்களை உருவாக்கி, படித்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசுத் துறைகளில் தொடக்கநிலை பணியாளர்களை நியமிக்க முடியவில்லை. புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதும் தான் இதற்குக் காரணம் ஆகும்!

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக 20.05.2020-இல் பிறப்பிக்கப்பட்டு, 24.10.2020 -இல் திருத்தம் செய்யப்பட்ட நிதித்துறை அரசாணை எண் 382- இல் தான் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை இன்றைய சூழலுக்கு பொருந்தாதவை!

கொரோனா நிலைமை சீரடைந்து பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கி, படித்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 265

0

0