எம்பியால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்… காதலனுடன் தீக்குளித்து தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்…!!!
Author: Babu Lakshmanan25 August 2021, 12:13 pm
பகுஜன் சமாஜ் கட்சி எம்பி மீது பலாத்கார குற்றச்சாட்டு சுமத்திய இளம்பெண், அவரது காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்பியான அதுல் ராய் என்பவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, எம்பி அதுல் ராய் போலீஸில் சரணடைந்தார். அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் எம்பிக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 16ந் தேதி திடீரென டெல்லி உச்சநீதிமன்றத்தின் வாயில் அருகே பாதிக்கப்பட்ட பெண் தனது காதலனுடன் தீக்குளித்தார். உயிருக்குப் போராடி வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது காதலர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். முன்னதாக அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், எம்பியோடு சேர்த்து
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நீதிபதி ஆகியோர் மீது குற்றஞ்சாட்டி இருந்தார்.
0
0