தமிழக அரசின் அடுத்த அதிரடி… வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்…. மினிவேன் மூலம் தஞ்சையில் ஒத்திகை!

27 March 2020, 11:15 am
Ration updatenews360
Quick Share

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், ரேஷன் பொருட்களை வீடுகளே சென்று வினியோகிக்க அரசு பரிசீலித்து வருகிறது; இதற்கான ஒத்திகை, தஞ்சையில் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மக்களின் துயரை துடைக்கும் வகையில், ரேஷன் பொருட்களை வீடுகளே சென்று வினியோகிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக தஞ்சாவூரில், வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள்கள் மற்றும் அரசு அறிவித்துள்ள 1000 ரூபாய் பணம் வழங்குவதற்கான ஒத்திகை நடைபெற்றது.

தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து மினி வேன் ஒன்றின் மூலம், அப்பகுதி வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்து, ஒத்திகை பார்க்கப்பட்டது.

இவ்வாறு வினியோகிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள், அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகு, தமிழகம் முழுவதும் வீடு தோறும் ரேஷன் பொருள் வினியோகம் விரிபடுத்தப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply