நியாய விலை கடை பணியாளர்களுக்கு ரூ.34.54 லட்சம் ஊக்கத்தொகை : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

16 September 2020, 5:42 pm
Quick Share

சென்னை : நியாய விலை கடை பணியாளர்களுக்கு ரூ.34.54 லட்சம் ஊக்கத் தொகையை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பொது விநியோகத்திட்ட நியாயவிலைக்‌ கடைகள்‌ மூலம்‌ அரசின்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயல்படுத்தும்போது, நியாயவிலைக்‌ கடை விற்பனையாளர்‌ மற்றும்‌ கட்டுநர்களுக்கு ஏற்படும்‌ கூடுதல்‌ பணிச்சுமையை ஈடுசெய்ய ஒரு குடும்ப அட்டைக்கு 0.50 பைசா வீதம்‌ வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

கோவிட்‌-19 பாதிப்பில்‌ இருந்து பொது மக்களை பாதுகாக்கும்‌ பொருட்டு நியாய விலை கடைகள்‌ மூலம்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு தலா இரண்டு முகக்கவசங்கள்‌ வீதம்‌ வழங்கப்படும்‌. முதற்கட்டமாக மாநகராட்சிகள்‌ (சென்னை மாநகராட்சி தவிர) நகராட்சிகள்‌, பேரூராட்சிகள்‌ ஆகிய பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களுக்கு
(69,09,385 குடும்ப அட்டைதாரர்களுக்கு) ஒருவருக்கு தலா 2 முகக்கவசங்கள்‌ வீதம்‌ அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும்‌ வழங்கப்படும்‌ என்று ஆணையிடப்பட்டுள்ளது.

தற்போது ஒப்பந்தப்புள்ளி மூலமாக தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்‌ மூலம்‌ முகக்கவசங்கள்‌ அனைத்து மாவட்டங்களுக்கும்‌ விநியோகப்பட்டு நியாய விலைக்கடைகள்‌ மூலமாக வழங்க அறிவுறுத்தியதின்படி தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள்‌ மூலம்‌ அவர்கள்‌ மாதாந்திர உணவுப்‌ பொருட்கள்‌ வாங்க வரும்போது
விநியோகம்‌ செய்யப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி தவிர இதர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்‌ உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில்‌ உள்ள விற்பனை முனையக்‌ கருவிகளில்‌ உரிய மாற்றங்கள்‌ செய்யப்பட்டு அத்தியாவசியப்‌ பொருட்களோடு அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 2 முசுக்கவசங்கள்‌ வீதம்‌ வழங்கப்பட்டு வருகிறது. பொதுவிநியோக திட்ட நியாய விலைக்கடைகள்‌ மூலம்‌ அரசின்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயல்படுத்தும்‌ போது, நியாய விலை கடை விற்பனையாளர்‌ மற்றும் ‌கட்டுநர்களுக்கு ஏற்படும்‌ கூடுதல்‌ பணிச்சுமையை ஈடுச்செய்ய ஒரு குடும்ப அட்டைக்கு 0.50 பைசா வீதம்‌ வழங்கலாம்‌ என அரசாணை (நிலை) எண்‌.25, கூட்டுறவு, உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்துறை நாள்‌.04.03.2020-ல்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதன்‌ அடிப்படையில்‌, கோவிட்‌-19 நோய்‌ தொற்றுள்ள காலகட்டத்திலும்‌ தன்னுடைய உயிருக்கு ஊறு நேரும்‌ எனத்தெரிந்தும்‌ எவ்வித இடர்பாடுகள்‌ இருந்தாலும்‌ நியாய விலை கடைகள்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ அரசின்‌ சிறப்பு திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு சென்று அடையும்‌ வண்ணம்‌ சிறப்புடன்‌ செயல்படும்‌ நியாய விலைகடை பணியாளர்களை ஊக்குவிக்குமாறு சிறப்பு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.0.50 வீதம்‌ 69,09.365 குடும்ப அட்டைகளுக்கு மொத்தம்‌ ரூ.34,54,692.50/- சிறப்பு ஊக்கத்‌ தொகையினை தமிழ்நாடு மாநில பேரிடர்‌ மேலாண்மை ஆணைய நிதியில்‌ இருந்து வழங்க பரிந்துரை செய்து உரிய அரசாணை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்‌.

முதன்மைச்‌ செயலாளர்‌ / வருவாய்‌ நிருவாக ஆணையர்‌ அவர்களின்‌ பரிந்துரையினை ஏற்று, முகக்கவசம்‌ கொள்முதல்‌ தமிழ்நாடு மாநில பேரிடர்‌ மேலாண்மை ஆணைய நிதியில்‌ இருந்து வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, மேற்படி நியாய விலை கடை பணியாளர்களை ஊக்குவிக்கும்‌ விதமாக சிறப்பு ஊக்கத் தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.0.50 வீதம்‌ 69,09,385 குடும்ப அட்டைகளுக்காக மொத்தம்‌ ரூ.34,54,692.50/- தமிழ்நாடு மாநில பேரிடர்‌ மேலாண்மை ஆணைய நிதியிலிருந்து ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

இந்தத் தொகை தமிழ்நாடு மாநில பேரிடர்‌ மேலாண்மை ஆணைய நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும்‌ எனவும்‌ ஆணையிடப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 4

0

0