உத்தரகாண்டிற்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயார் : எடப்பாடி பழனிசாமி..!!!

8 February 2021, 3:16 pm
cm at tuticorin - updatenews360
Quick Share

சென்னை : வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உத்தரகாண்ட்‌ மாநிலத்தில்‌ பனிப்பாறை உடைந்ததன்‌ காரணமாக சமோலி மாவட்டத்தில்‌ அலக்நந்தா மற்றும்‌ தவுலிகங்கா நதிகளில்‌ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின்‌ இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்‌ பெருக்கில்‌ சுமார்‌ பத்து நபர்கள்‌ உயிரிழந்துள்ளதாகவும்‌ தெரிய வருகிறது. இந்த துயரச்‌ செய்தியை அறிந்து நான்‌ மிகுந்த வேதனை அடைந்தேன்‌.

இந்த வெள்ளப்பெருக்கின்‌ காரணமாக உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மக்களின்‌ சார்பிலும்‌, தமிழ்நாடு அரசின்‌ சார்பிலும்‌ என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபங்களையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. உத்தரகாண்ட்‌ மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும்‌ வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்பதையும்‌ இத்தருணத்தில்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0