ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை : 4 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு

7 April 2021, 12:34 pm
rbi_governor_updatenews360
Quick Share

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக நிதி கொள்கை தொடர்பாக நடக்கும் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசுகையில், “ரிவர்ஸ் ரெப்போ எனப்படும் வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு செலுத்தும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும்.

அதேபோல, நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டதைப் போல ஜிடிபி வளர்ச்சி விகிதம் 10.5 சதவீதமாக இருக்கும். கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மாநில அளவிலான கட்டுப்பாடுகளால் உள்நாட்டு உற்பத்தியில் நிலையற்ற தன்மை நிலவுகிறது,” என்றார்.

Views: - 47

0

0