காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்…!!

19 November 2020, 2:24 pm
Quick Share

தமிழகத்தில் காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், சமீபத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் காவலர்களுக்கு வார விடுப்பு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வாரத்தின் 7 நாட்களும் பணி செய்வதால், காவலர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டிய காவல் அதிகாரிகள், இதனால் வாரத்திற்கு ஒருநாள் விடுப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.

நீண்ட நாட்களாக இருந்து வரும் இக்கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாரத்தில் ஏதாவது ஒருநாள் விடுப்பு, ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கலாமா எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0