குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், மேற்கு வங்க வாகன ஊர்திகள் பங்கேற்பில்லை… மத்திய அரசு திட்டவட்டம்..!!

Author: Babu Lakshmanan
18 January 2022, 2:24 pm
Quick Share

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம்பெறாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவின் போது, மாநிலங்களின் சிறப்பை பறைசாற்றும் விதமாக, வடிவமைக்கப்பட்ட வாகன ஊர்திகள் நடத்தப்படுவது வழக்கம். இதில், இந்திய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இந்த அணிவகுப்பில் விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். சில நேரங்களில் உலக நாட்டு தலைவர்களும் பங்கேற்பதுண்டு.

ஒவ்வொரு ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியின் போதும் எல்லா மாநிலங்களின் அலங்கார அணி வகுப்பு வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. சில குறிப்பிட்ட மாநிலங்களின் அணிவகுப்பு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த அணிவகுப்பு வாகனங்களின் தேர்வை மேற்கொள்வது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர் குழு ஆகும்.

அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தினம் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் வாகன ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வாகன ஊர்தியில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட இருப்பதாக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

குடியரசு தின விழாவில் எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 56 பரிந்துரைகளில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முன்மொழிவுகளை உரிய விவாதங்களுக்குப் பிறகே நிபுணர் குழு நிராகரித்துள்ளது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது

இதனிடையே, குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதியளிப்பது தொடர்பாக மறுபரிசீலனை வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

Image

இந்த நிலையில், குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம்பெறாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்தியில் பங்கேற்க முடியாது என்று கூறிய மத்திய அரசு அதிகாரிகள், இது தொடர்பான காரணத்தை இரு மாநிலங்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளனர்.

Views: - 315

0

0