நாளை 72வது குடியரசு தினக் கொண்டாட்டம் : குடியரசு தலைவர் இன்று மாலை உரை..!!!

25 January 2021, 12:15 pm
Ramnath Kovind - Updatenews360
Quick Share

72-வது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் நாட்டு மக்களிடம் இன்று மாலை உரை நிகழ்த்துகிறார்.

நாடு முழுவதும் நாளை 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் சிறப்பு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். மாலை 7 மணிக்கு அவர் நிகழ்த்தும் உரை, அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுகிறது. அதோடு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அனைத்து தூர்தர்ஷன் சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, அந்தந்த பிராந்தி மொழிகளிலும் ஒளிபரப்பாகும்.

Views: - 5

0

0