பிரபல ஊடக தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது : போலீசார் தாக்கியதாக புகார்..!!

4 November 2020, 11:21 am
arnap goswami arrest 1- updatenews360
Quick Share

மும்பை : பிரபல செய்தி தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கட்டிட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கும், அவரது தயாரும் கடந்த 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் தற்கொலைக்கு பிரபல செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, அன்வய் நாயக்கின் மகள் அதன்யா நாயக் அளித்த புதிய புகாரின் அடிப்படையில், அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டிருந்தார். மேலும், கோஸ்வாமியின் தொலைக்காட்சியில் இருந்து நிலுவைத் தொகை செலுத்தாதது தொடர்பான புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியை அவரது வீட்டிற்கே சென்று மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கு வலுக்கட்டாயமாக அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும், கைது நடவடிக்கைக்கு முன்னதாக போலீசார் தன்னை தாக்கியதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார் அளித்துள்ளார்.

Views: - 21

0

0

1 thought on “பிரபல ஊடக தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது : போலீசார் தாக்கியதாக புகார்..!!

Comments are closed.