சிமெண்ட் முதல் ஜல்லி வரை…கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு: விலையேற்றத்தால் ஷாக்..!!

Author: Rajesh
13 March 2022, 4:02 pm
Quick Share

சமையல் எண்ணெயை தொடர்ந்து கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல் 2 வாரங்களையும் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் காரணமாக இருநாடுகளிலும் மனித உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை இருநாடுகளும் வெளியிடவில்லை.

இந்த போர் காரணமாக சர்வதேச அளவில் வணிக ரீதியான பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும், கச்சா எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலையும் தற்போது உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்படி, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.380க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டை தற்போது ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், முதல் மற்றும் இரண்டாம் தர கம்பிகள் டன் ஒன்றுக்கு ரூ.75,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.20,000 உயர்ந்து ரூ.95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

M-sand (1 யூனிட்) ரூ.2,800க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.3,500க்கும், p-sand ரூ.3,500க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.4,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முக்கால் இன்ச் ஜல்லி ரூ.2,500ல் இருந்து ரூ.3,300ஆகவும், கிராவல் மண் 1 யூனிட் ரூ.1,500ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல் ஒன்று ரூ.8.50க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.11.50க்கும், பிளைஏஷ் ஒன்று ரூ.6.50க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.9000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

Views: - 844

0

0