மராட்டியத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்: சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

3 July 2021, 10:20 am
Drug_Racket_UpdateNews360
Quick Share

நவிமும்பை: மராட்டியத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதை பொருளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மராட்டியத்தின் நவிமும்பை நகரில் ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் ரூ.300 கோடி மதிப்பிலான 290 கிலோ எடை கொண்ட போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இதன்பின்னர் இந்த வழக்கை வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திடம் ஒப்படைத்து உள்ளனர். அவர்கள் இந்த போதை பொருள் கடத்தல் பற்றி 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 85

0

0