ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலி : வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 உயர்வு

Author: Babu Lakshmanan
1 March 2022, 11:01 am
Indane Gas - Updatenews360
Quick Share

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிகழ்ந்து வருவதன் எதிரொலியாக, இந்தியாவில் வர்த்தக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 உயருகிறது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 5வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டிசல் விலையில் மாற்றம் இல்லை. அநேகமாக இந்த வார இறுதிக்குள் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் வர்த்தக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 உயருகிறது. இதனால், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.2,012க்கு விற்பனையாகிறது. இதேபோல, 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.27 உயர்ந்து, ரூ.569க்கு விற்கப்பட உள்ளது. எனினும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் உயர்வில்லை.

இதேபோன்று தமிழகத்தில் வர்த்தக உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50 ஆக விற்கப்பட உள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமுல் இல்லாமல், ரூ.915.50க்கு விற்பனையாகிறது.

Views: - 985

0

0