சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை இன்று திறப்பு : பக்தர்களுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்…!!!
Author: Babu Lakshmanan16 October 2021, 9:03 am
திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மேலும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் மலையாள மாதப் பிறப்பையொட்டி மூன்று நாட்கள் திறக்கப்படுவது வழக்கம். இதன்படி மலையாளத்தில் துலா மாதம் என அழைக்கப்படும் ஐப்பசி மாதப் பிறப்பான இன்று கோவில் திறக்கப்படுகிறது. கோவில் திறக்கும் தினமான இன்று பூஜைகள் எதுவும் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல், 21ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிய மேல்சாந்தியை தேர்ந்தெடுப்பதற்கான குலுக்கல் நாளை நடக்கிறது. பந்தள அரண்மனையை சேர்ந்த 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இருவர், புதிய மேல்சாந்தியின் பெயரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0