ஐயப்ப பக்தர்களுக்கு குட்நியூஸ் : சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி..!!

1 December 2020, 8:07 pm
sabarimala-updatenews360
Quick Share

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடனேயே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பம்பையில் குளிக்கத் தடை, கொரோனா நெகட்டிவ் சான்று, இரு இடங்களில் பரிசோனை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதோடு, தினசரி 1,000 பக்தர்களும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் 2,000 பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்று, தினசரி 2,000 பக்தர்களுக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 4,000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்க கேரள தேவசம் போர்டு பரிந்துரை செய்தது. இதனை கேரள அரசும் ஏற்றுக் கொண்டது. மேலும், நாளை முதல் இணையதளம் மூலம் பதிவு செய்து பக்தர்கள் தரிசனம் செய்ய வரலாம் என தெரிவிக்கப்பட்டது.

Views: - 0

0

0