திமுக கொடி கட்டிய காரின் பாதுகாப்புடன் மணல் கடத்திய லாரி : திரைப்பட பாணியில் துரத்திப் பிடித்த போலீசார்!!

21 July 2021, 7:18 pm
sand theft - updatenews360
Quick Share

சிவகங்கையில் திமுக கொடி கட்டிய காரின் பாதுகாப்புடன் மணல் கடத்தும் லாரியை காவல்துறை துரத்திச் சென்ற பரபரப்பு காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேம்பத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு பகுதியில் பகல் நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் சென்ற போது, ஆற்றில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த லாரியை மடக்கிப் பிடிக்க போலீசார் முயன்றனர்.

ஆனால், மணல் கடத்தல் லாரிக்கு பாதுகாப்பாக சென்ற திமுக பிரமுகர் ஒருவரின் கார் காவல்துறைக்கு வழிவிடாமல் தடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் மணல் லாரி தப்பிச் சென்ற நிலையில், பாதுகாப்புக்குச் சென்ற திமுக பிரமுகரின் காரை காவல்துறையினர் மடக்கி பிடித்தபோது, அவர் எஸ்.எஸ்.ஐ ஒருவரின் பெயரை கூறி அவரின் அனுமதியோடு தான் மணல் கடத்தப்படுவதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இந்த விவகாரம் தெரிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மணல் கடத்தல் சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யாமல் விடப்பட்ட லாரி மற்றும் மணல் கடத்தலுக்கு பாதுகாப்பாக சென்ற திமுக கொடி கட்டிய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். மேலும், காரில் வந்த விஜய் மற்றும் கடத்தல் லாரி ஓட்டுநர் ஆகியோரை உடனடியாக கைது செய்யவும் அவர் உத்தரவிட்டார். அதன்படி, மணல் கடத்தலுக்கு துணை போன திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே, திமுக ஆட்சியில் மணல் கடத்தல் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், திமுக கொடி கட்டிய காரின் பாதுகாப்புடன் லாரியில் மணல் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 164

0

0

Leave a Reply