சார்பட்டா பரம்பரையில் அந்த வசனத்தை நீக்குங்க : இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்..!!!

Author: Babu Lakshmanan
16 August 2021, 2:10 pm
sarpatta parambarai - updatenews360
Quick Share

சார்பட்டா பரம்பரை படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்குமாறு இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் எம்ஜிஆர், கருணாநிதி காலத்து அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் திமுகவின் பிரச்சாரப் படமாக இருப்பதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இந்தப் படத்தில் எம்ஜிஆரை தவறான கோணத்தில் சித்தரித்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சார்பட்டா பரம்பரை இயக்குனர் ரஞ்சித்துக்கும் ஒடிடி தளத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில், எமெர்ஜென்சி காலத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி குறித்து பசுபதி கதாபாத்திரம் நிறைய வசனங்களை பேசியுள்ளது. மிசாவில் கைது செய்யப்பட்ட போது முதலமைச்சர் மகன் கூட மிசாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று ஒரு வசனம் வருகிறது. உண்மைக்கு புறம்பான விஷயங்களை மறைத்து யாரையோ ஒரு நபரை திருப்திப்படுத்துவதற்காக, எந்த ஒரு அரசு ஆவணமும் இல்லாத ஒரு விஷயத்தை அந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

மேலும் மிசாவை பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் அறிக்கைகளையும், அந்த அறிக்கையின் 575 பக்கங்களிலும் ஸ்டாலினுடைய பெயர் எந்த இடத்திலும் பதிவாகவில்லை. எனவே, இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்திற்குள்ளாக, அந்த சர்ச்சை வசனத்தை நீக்கம் செய்து, மறுவெளியீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 271

0

0