அதிமுக துண்டை அணிந்து ஒசூர் முத்துமாரியம்மன் கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம்!!

8 February 2021, 1:02 pm
Sasikala salem - updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : ஒசூர் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுக துண்டுடன் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிந்து கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். ஆனால், அதற்கு முன்பாகவே, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 31ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். பிறகு பெங்களூரூவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்த அவர், இன்று சென்னை திரும்பினார்.

இந்த சூழலில், அதிமுக கொடி கட்டிய காரில் இருந்து பெங்களூரூவில் இருந்து சென்னை புறப்பட்டார். ஆனால், அவரை தடுத்து நிறுத்திய போலீசார் காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றினர். பின்னர், அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த வேறு ஒரு காரில் மேலும் தனது பயணத்தை தொடர்ந்தார். மேலும், அதிமுக கொடி பயன்படுத்தியது தொடர்பாக அவருக்கு நோட்டீஸும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக துண்டுடன் ஓசூர் முத்துமாரி அம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
சாலை மார்க்கமாக அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் அவர் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Views: - 4

0

0