இன்று சசிகலா… நாளை டிடிவி தினகரன் : ஜெயலலிதாவின் ட்ரீம் சக்ஸஸ்…. பாஜக நம்பிக்கை…!!!

4 March 2021, 1:36 pm
Quick Share

சென்னை : சசிகலா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், இது தொடர்பாக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி விளக்கம் அளித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன பிறகு, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படியிருக்கையில், சசிகலாவின் ஒவ்வொரு செயலையும் ஊடகத்தினர் உன்னிப்பாக கவனித்து வந்தன. தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியயலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்திருப்பது அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலாவின் இந்த முடிவு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு மட்டுமில்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவின் இந்த முடிவுக்கு பாஜகவின் நிர்பந்தம்தான் காரணம் என எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, சசிகலா அரசியலில் இருந்து விலக பாஜக நிர்பந்தித்ததாக வெளியான தகவல் வதந்தி என விளக்கம் அளித்துள்ளார்.

CT Ravi - Updatenews360

மேலும் அவர் கூறுகையில், “ஜெயலலிதாவின் கனவை நனவாக்க சசிகலா முடிவு எடுத்துள்ளார். டிடிவி தினகரனும் சரியான முடிவு எடுப்பார் என நம்புகிறோம். சசிகலா அரசியலில் இருந்து விலக பாஜக நிர்பந்தித்ததாக வெளியான தகவல் வதந்தி. அதிமுகவை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வருவதுதான் பாஜகவின் திட்டம். அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்பதைத்தான் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார், என தெரிவித்தார்.

Views: - 1

0

0