மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ்..? விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் இன்று முடிவு

30 January 2021, 12:58 pm
sasikala - updatenews360
Quick Share

கர்நாடகா : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா டிஸ்சார்ஜ் குறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை இன்று முடிவு செய்ய இருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா வீரியம் குறைந்த நிலையில் ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிகிச்சைக்கு சசிகலா ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

மேலும், சசிகலாவுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு 272 ஆக உள்ளதால் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. தொடர் சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, எப்போது தமிழகம் வருவார் என அவரது ஆதரவாளர்கள் காத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சசிகலா டிஸ்சார்ஜ் குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0