ஆரம்பமே அபசகுணம்… சசிகலாவை எச்சரித்த ஜோதிடர்… அப்செட்டில் அமமுக..!!!

8 February 2021, 7:26 pm
sasikala-3-updatenews360
Quick Share

பெங்களூரூ சிறையில் இருந்து விடுதலையான பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார். ஆனால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில், தொடர்ந்து அங்குள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இதையடுத்து, அவர் 7ம் தேதி சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவரது பயணம் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

மேலும், கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை வரை சசிகலாவை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், சசிகலாவின் காரை பின் தொடர்ந்து 500 முதல் 1000 கார்கள் வர இருப்பதாகவும் செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டு வந்தன. இதனால், அமமுகவினர்ரும் எதையோ சாதித்ததை போல காணப்பட்டு வந்தனர்.

sasikala car - updatenews360

ஆனால், சசிகலாவின் வருகையின் போது நடந்ததோ வேறு….கிருஷ்ணகிரியில் வெறும் 200 முதல் 250 பேர் மட்டுமே காணப்பட்டனர். அதிலும், பெரும்பாலானோர் செய்தி சேகரிக்க வந்தவர்கள். மேலும், சசிகலாவின் காரை பின் தொடர்ந்து வெறும் 10 முதல் 15 கார்களே வந்துள்ளன.

இதனிடையே, சசிகலாவின் வருகையின் போது நடந்த அசம்பாவீதங்களை பார்க்கும் போது, பேசாமல் அவர் 7ம் தேதி வந்திருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். சென்னை கிளம்பவிருந்ததாகக் அறிவிக்கப்பட்ட 7ம் தேதி, நாள் சரியில்லை என அவரது ஜோதிடர் கூறியதாகவும், இதனாலே அவர் தேதியை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், 8ம் தேதியான இன்றும் அவர் வரும் வழிகளில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டது சசிகலாவிற்கு சற்று மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமமுகவினர் கூறுகின்றனர். பெங்களூரூவில் இருந்து சசிகலா வந்த காரின் மீது பின்னே வந்த கார் ஒன்று உரசி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பெரும் சேதம் ஏற்படாவிட்டாலும், அதிர்ந்து போன சசிகலா, வேறு காரில் பயணத்தை தொடர்ந்தார்.

Sasikala salem - updatenews360

பின்னர், ஒசூர் முத்துமாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சசிகலா, இனி செல்லும் வழியில் எந்த பிரச்சனையும் வரக் கூடாது என வேண்டியபடி, மீண்டும் சென்னையை நோக்கி புறப்பட்டார். ஆனால், அவர் நினைத்தது வேறு… நடந்ததோ வேறு…

car fire 1- updatenews360

கிருஷ்ணகிரியில் சசிகலாவிற்கு மாபெரும் வரவேற்பு கொடுக்க பட்டாசுகள் வெடித்து அமர்க்களப்படுத்தப்பட்டது. அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், 2 கார்கள் எரிந்து சாம்பலாகின. தொடர்ந்து தனது பயணத்தில் அசம்பாவீதங்கள் நிகழ்வதை கண்டு மனம் நொந்து போன சசிகலா, மீண்டும், காருக்கு பதிலாக, பெரிய வேனில் பயணிக்கத் தொடங்கினார்.

sasikala 2- updatenews360

அவரது ஜோதிடர் கணித்ததை போன்றே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சசிகலாவிற்கு, நேரம் சரியில்லாததை உணர்த்தும் சமிக்ஞைகளாகவே இந்த விபத்துக்கள் பார்க்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் தினகரன்தான் காரணம் என்றும், சசிகலாவின் அதிர்ஷ்ட நாளாக இருக்கும் 9ம் தேதியன்று அவரை அழைத்து வந்திருக்க வேண்டும், மாறாக அண்ணன் திட்டமிட்டதுதான் தற்போது அபச குணங்கள் நிகழ்ந்திருப்பதாக அமமுகவினர் புலம்பி வருகின்றனர்.

எது எப்படியோ, சின்னம்மாவின் தமிழக என்ட்ரி கெத்தாக இருக்கும் என எதிர்பார்த்த அமமுகவினருக்கு, உயிராவது தப்பிச்சது என்று சொல்லும் அளவிற்கான சம்பவங்களே நிகழ்ந்திருப்பது, ‘என்ன வச்சு காமெடி… கீமெடி பண்ணலயே’ என்னும் டையலாக்தான் நியாபகத்திற்கு வருகிறது.

Views: - 7

0

0