சசிகலாவுக்கு எல்லாமே பாசிட்டிவ்தான்… மருத்துவமனை மற்றும் சிறைத்துறையின் அடுத்தடுத்த அறிவுப்புகள்… குஷியில் அமமுக தொண்டர்கள்..!!!

25 January 2021, 2:13 pm
sasikala - updatenews360
Quick Share

சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி அவர் விடுதலையாக உள்ள நிலையில், திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பெங்களூரூ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் 20ம் தேதி சேர்க்கப்பட்டார்.

கொரோனா மற்றும் சர்க்கரை நோய்,தைராய்டு உள்ளிட்ட நோய்களுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சசிகலாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரே உணவை உட்கொள்வதுடன், எழுந்து உட்காருதல் மற்றும் உதவியுடன் நடத்தல் போன்ற செயல்களையும் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்க்கரையில் அளவு 205 ஆக இருப்பதால், இன்சுலின் செலுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர் ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, விடுதலை செய்வதற்கான அனைத்து ஆவண பணிகளும் நிறைவடைந்த நிலையில், வரும் 27ம் தேதி அவர் உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை நிர்வாகமும் அறிவித்துள்ளது.

உடல்நிலையில் முன்னேற்றம் என மருத்துவமனை நிர்வாகமும், கட்டாயம் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை நிர்வாகமும் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0