சசிகலா ரிலீசில் எழுந்துள்ள புதிய சிக்கல்…! அதிர்ந்த தொண்டர்கள்…!

2 August 2020, 12:23 pm
Sasikala updatenews360
Quick Share

சென்னை: பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெகு சீக்கிரம் விடுதலையாக சசிகலா விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. அவரின் விடுதலை பற்றி தான் இப்போது தொடர்ந்து பேச்சுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த மாதம் ரிலீசாவார், அடுத்த மாதம் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் 15ம் தேதி அவர் ரிலீசாகிறார் என்று ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் உலவி வருகிறது.

ஆனால் இந்த விடுதலையை அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கான சில காரணங்களும் முன் வைக்கப்படுகின்றன. அதாவது இப்போது கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கிறது. ஆகையால் அவர் விடுதலையை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

sasikala updatenews360

அதோடு தமது விடுதலை தொடர்பான அறிவிப்பும், அப்போது தமக்கு அளிக்கப்படும் வரவேற்பும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்…. ஆனால் கொரோனா ஊரடங்கு இந்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக கூடி வரவேற்க முடியாது என்பதால் தமது விடுதலையை செப்டம்பர் மாதம் தள்ளி போட்டிருக்கிறாராம். இது தொடர்பாக அவரது ஆஸ்தான ஜோதிடரிடம் கலந்து பேசி உள்ளாராம்.

sasikala 2- updatenews360

ஆகையால் சசிகலா விடுதலை என்பது இந்த மாதம் இல்லை என்பதால் அவரது ஆதரவாளர்கள் சோகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுகவும் சசிகலா விடுதலை தொடர்பான நடவடிக்கைகளை உற்று பார்த்து வருகிறதாம். விடுதலை அறிவிப்புக்கு பின் சில முக்கிய நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

Views: - 13

0

0