தீவிர அரசியலில் ஈடுபடுவேன்… ஒருதாய் பிள்ளைகள் ஒற்றுமையாக செயல்படுவதே என் விருப்பம் : சசிகலா பேச்சு..!!

8 February 2021, 6:13 pm
sasikala 2- updatenews360
Quick Share

திருப்பத்தூர் : தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும், எல்லோரும் இணைந்து செயல்படுவதையே விரும்புவதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா, பெங்களூரூவில் இருந்து கார் மூலம் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். வரும் வழியில் அமமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்திக்கிறது. அப்போது எல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம், எனக் கூறினார்.

அப்போது, அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா..? என்ற கேள்விக்கு, ” பொறுத்திருந்து பாருங்கள். தீவிர அரசியலில் ஈடுபடுவேன்; விரைவில் எல்லோரையும் சந்திப்பேன். அடக்கு முறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன்,” எனக் கூறினார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது :- ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட்டது குறித்து தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அதிமுக கொடியை பயன்படுத்தியது குறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது அவர்களின் பயத்தையே காட்டுகிறது, விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன், எனக் கூறினார்.

Views: - 0

0

0