சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா விடுதலை : பிப்.,3ம் தேதி தமிழகம் வருகை..? 65 இடங்களில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு..!!

27 January 2021, 11:16 am
Sasikala-in-jail-updatenews360
Quick Share

பெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை காலம் முடிந்த ஜன., 27ம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக,
திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த 20ம் தேதி பெங்களூரூ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சிகிச்சைக்கு பிறகு அவர் தொற்றில் இருந்து குணமடைந்தார். இருப்பினும், சர்க்கரை நோய், தைராய்டு உள்ளிட்ட நோய்களின் பாதிப்பிற்கு சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விடுதலை செய்வதற்கான அனைத்து ஆவண பணிகளும் நிறைவடைந்த நிலையில், அவர் இன்று விடுதலை செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை தொடர்பான ஆவணங்களில் மருத்துவமனைக்கு நேரில் சென்று அதிகாரிகள் கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் இன்னமும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவதால் தமிழகம் வருவது தாமதமாகியுள்ளது. ஆனால், பிப்.,3 தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, கர்நாடகம் முதல் தமிழகம் வரை 65 இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பை அளிக்க அமமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

Views: - 0

0

0

1 thought on “சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா விடுதலை : பிப்.,3ம் தேதி தமிழகம் வருகை..? 65 இடங்களில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு..!!

Comments are closed.