சுதந்திர போராட்டத்தின் எழுச்சி நிகழ்வு ‘சவுரி சவுரா’ : நூற்றாண்டு விழாவை 4ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

2 February 2021, 8:09 pm
pm modi - updatenews360
Quick Share

டெல்லி : சவுரி சவுரா நூற்றாண்டு விழாவை பிரதமர் மோடி வரும் 4ம் தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது ரவுலட் என்னும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியர்களை ஒடுக்கும் இந்த சட்டத்திற்கு எதிராக, உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகருக்கு உட்பட்ட சவுரி சவுரா பகுதியில் 1922ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 3 பேர் பலியாகினர். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், காவல்நிலையத்திற்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 23 போலீசார் உயிரிழந்தனர்.

சுதந்திர போராட்டத்திற்கு எழுச்சிக்கு முக்கிய பங்கு வகித்த இந்த நிகழ்வில் தொடர்புடைய 228 இந்தியர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவர்களில் 172 பேர் பிரிட்டிஷாரால் தூக்கில் போடப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு 1982ல் மத்திய அரசு சார்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையில் நினைவகம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இதன் நூற்றாண்டு விழா சிறப்புடன் கொண்டாடப்படும் என்றும் இளைஞர்களிடையே தேசப்பற்றை ஏற்படுத்த ஓராண்டிற்கு இந்த விழா கொண்டாடப்படும் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். அதன்படி, நூற்றாண்டு கொண்டாட்டங்களை பிரதமர் மோடி வரும் 4ம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சியின் மூலம் திறந்து வைக்க இருக்கிறார்.

Views: - 5

0

0