#அம்மாஉணவகம்காப்போம் : திமுகவினருக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஸ்டேக்..!!!

4 May 2021, 3:35 pm
amma food trending - updatenews360
Quick Share

சென்னையில் அம்மா உணவகம் திமுகவினரால் சேதப்படுத்தப்பட்ட நிலையில், அம்மா உணவகம் காப்போம் என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரு 92வது வார்டு அம்மா உணவகத்தை திமுகவினர் சூரையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகள் சிலர் அம்மா உணவகத்திற்குள் சென்று, அங்கிருந்த பெயர் பலகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை தூக்கி எரிந்து அட்டகாசம் செய்தனர். இது அங்கு உணவருந்த வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

amma unavagam attack - updatenews360

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு விநியோகிக்கப்பட்டு வந்தது பெரும் பயனுள்ளதாக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், திமுகவினர் இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டனத்திற்கு ஆளாகியது.

இதனிடையே, அம்மா உணவகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்த திமுக, மீண்டும் அந்த பெயர் பலகையை இருந்த இடத்திலேயே பொருத்த நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், அம்மா உணவகம் சேதப்படுத்தியதை கண்டிக்கும் விதமாகவும், அம்மா உணவகங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அம்மா உணவகம் காப்போம் என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Views: - 193

0

0

Leave a Reply