டெண்டர் ஒதுக்குவதில் முறைகேடு.. G-pay-வில் லஞ்சம் பெற்ற அமைச்சர் சிவசங்கர்… ஆதாரத்தை வெளியிட்ட சவுக்கு சங்கர்..!!

Author: Babu Lakshmanan
12 October 2023, 5:08 pm
Quick Share

நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் பேருந்தை நிறுத்துவது தொடர்பான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை நிறுத்துவதற்கான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் உள்ளிட்ட 4 பேர் மீது சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் கூறியதாவது :- தமிழ்நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் டெண்டர்கள் விடப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதற்கு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகள் ரூ.102க்கும், சாதாரண பேருந்துகள் ரூ.62 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் 102 ரூபாய் 62 ரூபாய் இருந்ததை விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துக்கு ரூ.75ம், சாதாரண பேருந்த்துக்கு ரூ.50 கட்ட வேண்டும் என நிர்ணயித்தார். அதிமுக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விரைவு போக்குவரத்து கழக பேருந்துக்கு 27 ரூபாயும் சாதாரண பேருந்துக்கு 12 ரூபாயும் ராஜ கண்ணப்பனுக்கு கமிஷனாக சென்றது.

தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கக்கூடிய சிவசங்கர் பதவியேற்ற பிறகு நெடுஞ்சாலை உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் பொலிட்டிக்கல் பிஏ லூயிஸ் கதிரவன் என்பவரின் பினாமியான வேடசந்தூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் மூலம் முறைகேடு நடைபெற்று வருகிறது.

அமைச்சரின் பினாமியான தங்கவேல் 27 உணவக உரிமையாளர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு டெண்டர் வாங்கித் தருகிறேன் எனக் கூறி தனக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டு Gpay மூலம் 25 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அவர்களிடம் பணம் பெற்றுள்ளார். 27 ஹோட்டல் உரிமையாளர்களின் டெண்டர்களை ஒரே இடத்தில் வைத்து டெண்டர்க்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், அவருடைய உதவியாளர் லூயி கதிரவன் அவருடைய பினாமி தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ளேன். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்வேன், என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Views: - 407

0

0