ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி… 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைப்பு

27 April 2021, 1:05 pm
sterlite - updatenews360
Quick Share

சென்னை : ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்சிஜன் பற்றி வேதாந்தா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜனை இலவசமாக உற்பத்தி செய்து தருவதாக தெரிவித்தது. இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்து, 4 மாதங்களுக்கு ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய அரசு மட்டும் தான் பிரித்து கொடக்க முடியும் என்று மத்திய அரசு தனது வாதத்தை முன்வைத்தது. அதேவேளையில், ஆக்சிஜன் தயாரிக்க மின்சாரத்தை வழங்க வேண்டும் என உறுதியளித்த வேதாந்தா நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்கும் குழுவில் ஆலை எதிர்ப்பாளர்கள் இடம்பெறகூடாது என தெரிவித்தார்.

அனைத்து தரப்பின் வாதத்தையும் கேட்ட உச்சநீதிமன்றம், ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆக்சிஜன் தயாரிப்பை மேற்பார்வை செய்ய தமிழகத்தைச் சேர்ந்த 3 சுற்றுச்சூழல் நிபுணர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும், இந்தக் குழுவில் தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தயாரிக்க எத்தனை பேரை அனுமதிக்கலாம் என குழு முடிவு செய்யும் என்றும், பணியாளரை அனுமதிக்கும் முன் குழவிடம் திட்டம் பற்றி வேதாந்தா விளக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Views: - 224

0

0