10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வை நடத்துங்க : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

21 July 2021, 12:30 pm
School Educaton - Updatenews360
Quick Share

சென்னை : 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆரம்பிக்க இருப்பதை முன்னிட்டு, நேற்று முன்தினம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நடத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்பு ஆகியவற்றில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அலகு தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்காக மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க வேண்டும். 50 மதிப்பெண்களுக்கு வினாத்தாளை அதில் பதிவிட்டு விடைகளை எழுதி வாங்க வேண்டும். இதற்கான வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பெற்று, இந்த அலகு தேர்வினை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

Views: - 85

0

0

Leave a Reply