செப்.,1ம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியா..? அமைச்சர் சொன்ன பதிலால் எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்..!!

Author: Babu Lakshmanan
17 August 2021, 5:47 pm
TN school - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 20ம் தேதி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் செப்.,1ம் தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், இதுபற்றி எந்தவித அறிவிப்பும் வெளிவராத நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா..? என்பது குறித்து வரும் 20ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 159

0

0