பள்ளிகளை அக்.,1ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி : விருப்பமுள்ள மாணவர்கள் செல்லலாம்..!

24 September 2020, 4:12 pm
Quick Share

வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதியளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. மேலும், தேர்வுகளின் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடப்பாண்டு கல்வி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் 4வது கட்ட தளர்வுகளை வெளியிட்ட மத்திய அரசு, செப்.,21ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதியளித்தது. குறிப்பாக, 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிகளுக்கு சென்று கல்வி பயிலாம் எனவும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு செல்லலாம் என்றும், மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் 28ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 12

0

0