ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 78.47% வாக்குகள் பதிவு : மாவட்ட வாரியான நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2021, 4:06 pm
Second Phae Election - - Updatenews360
Quick Share

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதல்கட்ட தேர்தல் அக்.6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட தேர்தல் அக்.9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில், 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 35 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புளுக்கு சாதாரணத் தேர்தல்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், ஏனைய 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாத மற்றும் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 09.10.2021 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது.
இந்த வாக்குப்பதிவில் மேற்படி மாவட்டங்களில் கீழ்க்கண்டவாறு வாக்குகள் பதிவாகியுள்ளன.

Views: - 402

0

0