கைதின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி.. நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துட்டோம் ; சீமான் கிண்டல்

Author: Babu Lakshmanan
14 June 2023, 11:13 am
Quick Share

நாகர்கோவில் ; அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலடித்துள்ளார்.

நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெற உள்ள நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் வந்த சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- செந்தில் பாலாஜியின் கைது செய்யப்பட்டது, நடவடிக்கை மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறையாகும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சினிமா பாணி. எனினும் இந்த நேரத்தில் செந்தில் பாலாஜி குணமாகி வர வேண்டும் என வாழ்த்துக்கிறேன்.

யார் வந்தாலும் அவர்களது வசதிக்கு அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். கைது என்றால் நெஞ்சுவலி வருவது எல்லாம் நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துள்ளோம். அப்படி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலி வர வேண்டும்.


தேர்தல் நெருங்க நெருங்க இதே போன்று பல வேலைகளை மத்திய அரசு செய்யும் . இது எதிர்பார்த்தது தான். சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல் செயல்படுகிறது. இந்த அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி இல்லை. இது கொடுங்கோலாட்சி முறை.

அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட ஊழல் என குற்றம்சாட்டுவது, காலம் தாழ்ந்த நடவடிக்கை. மத்திய அரசு மிரட்டி அச்சுறுத்தும் பாணியில் பணிய வைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று, என்று கூறினார்

Views: - 389

0

0