உதயநிதிக்கு கும்பிடு போடும் திமுக தலைவர்கள்… இதுவா சுயமரியாதை சுடர்… முடிந்தால் என்னை தொட்டுப் பாருங்கள் : விளாசி தள்ளிய சீமான்!!

Author: Babu Lakshmanan
14 February 2022, 5:49 pm
Quick Share

காஞ்சிபுரம் : முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்தரமேரூர் பேரூராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வருகின்ற நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், 100க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது :- காஞ்சிபுரம் மண்ணில் பிறந்த அண்ணாவின் பெயரைச் சொல்லி வாக்கு கேட்கும் இவர்கள், ” சாராயம் விற்று வரும் காசு குஷ்டநோயிலிருப்பவர்களின் கையில் இருந்து வரும் வெண்ணைக்கு சமம்” எனக் கூறிய அண்ணாவின், சொல்லுக்கு ஏற்ப அதே வேலையை தான் திமுக கட்சி செய்து வருகின்றது.

அரை நூற்றாண்டுகளாக ஆட்சியை மாறி மாறி அமைத்து அடிப்படை கட்டமைப்பு கூட செய்யாமல் உள்ளதால் தான்  சென்னை மழை காலங்களில் தத்தளிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என கொண்டு வருவதற்கு முன் ஒரே சுடுகாடு, ஒரே குளம் என கொண்டு வரவேண்டும்.

ஆளுநர் மாநில அரசுகளை ஆய்வு செய்வது முறையல்ல. ஆளுநர் மாநில அரசை நீதி ஆய்வு மேற்கொள்வது தவறு. இந்திய அரசை ஜனாதிபதி ஆய்வு மேற்கொண்டால் அனுமதிப்பார்களா, அரசு  சரியாக திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்கிறது என ஆளுநர் மேற்பார்வை செய்யலாம். அண்ணா கூறியதைப் போல ஆட்டுக்கு ஏன் தாடி, நாட்டுக்கு ஏன் ஆளுநர். நாமென்ன வீட்டு பாடமா எழுதித் தருகிறோம். அவர் திருத்தி நமக்கு மார்க் போடுவதற்கு. ஆளுநரின் வேலை ஒற்றர் வேலை.

திமுகவினரால் மிரட்டப்படுவது அச்சுறுத்தல்படுவது தொடர்பாக அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான். அதிமுக, பாமக விட அதிக அளவு பாதிக்கப்பட்டது நாங்கள்தான். 60 பேருக்கும் மேற்பட்டோர் மிரட்டப்பட்டுள்ளனர். சில இடங்களில் வேட்பாளர்களை மூன்று நாட்கள், நான்கு நாட்கள் கடத்தி வைத்திருந்திருக்கிறார்கள். இளம் வயது வேட்பாளர்களை கடத்தி இருக்கிறார்கள். இதை சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது இது கொடுங்கோன்மை. இப்படி செய்வதற்கு தேர்தலே வேண்டாம். நாங்கள் வென்று விட்டோம் என அறிவித்து விட்டு போய்விடலாம். தேர்தல் என்றால் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும். பேரம் பேசாமல் அச்சுறுத்தல், இல்லாமல் நடைபெற வேண்டும். 

நீட், ஜிஎஸ்டி,  உள்ளிட்டவற்றை முதன்முதலில் கொண்டு வந்ததே காங்கிரஸ் தான். அது உலகத்திற்கே நன்றாக தெரியும். காங்கிரஸ் கொண்டு வந்ததை பாரதிய ஜனதா தொடர்கிறது. காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, இதை செயல்படுத்த முடியவில்லை. இப்போது பாரதிய ஜனதா தனி பெரும்பான்மையாக இருப்பதால் அதை செயல்படுத்தி வருகிறார்கள்.

வார்டு உறுப்பினர்களாக நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் வந்தால் யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே மேயர் உள்ளிட்ட பதிவுகளை பெறுவோம், எனக் கூறினார்.

மானம் இல்லாமல் வேலை செய்ய வேண்டுமென திமுக நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருவது குறித்து கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது :- தன்மானத்திற்கு என்று இயக்கம் கண்டவன் தமிழன். ஆனால் தமிழன் தான் அவமான சின்னமாக உலகம் முழுவதும் அலைகிறான். அதற்கு காரணம் திமுக கால்களில் விழ வேண்டும் என எண்ணுகிறது. உதயநிதி என்பவர் சாதாரண சட்டமன்ற உறுப்பினர். ஆனால், அனுபவம் மிகுந்த அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட சட்டசபையில் அவரைப் பார்த்து குனிந்து கும்பிடும் காட்சிகள் எல்லாம் இருக்கிறது. இதுவா சுயமரியாதைச் சுடர்.

திட்டங்களை மட்டுமே தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு  செய்து வருகிறார். அதனை செய்யப்படுத்துவதில்லை. தேர்தல் நேரத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றும் , 5 சவரன் நகை தள்ளுபடி என்றும் கூறியது வெறும் வெற்று திட்டங்களாக உள்ளது.  இவர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகள் நாங்கள் தான் ஆட்சியில் இருப்போம் என சொல்லிக்கொண்டு வருகிறார்கள், நிலையானது என்று ஆட்சியாளர்கள் நினைப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும். இங்கு எதுவும் நிலையானது அல்ல.

தமிழக மீனவர்கள் 850க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். கடலில் மீனவர்களின் படகை வேண்டுமென்றே மோதி சிதைத்து வருகிறார்கள் எனக் கூறிய திமுகவினர், ஆட்சிக்கு வந்த பிறகு எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை துரத்தி வருகின்றார்கள்.  படகுகளை சேதப்படுத்துவது இல்லை என திமுகவினர் இரட்டை வேடம் போடுகிறார்கள்.

ஸ்டாலின் தந்தை என் மீது ஏராளமான வழக்குகள் போட்டு உள்ளார். தேசத்துரோக வழக்குகள் உள்ளது. இப்போது ஆட்சியில் இருக்கும் திமுக என்னை கைது செய்து பார்க்கட்டும், என சவால் விட்டார்.

Views: - 973

0

0