கைலாசாவில் வணிகம் செய்ய இந்த ஊர்களுக்கு முன்னுரிமை: நித்யானந்தாவின் கலகலப்பான உரை

23 August 2020, 10:57 pm
Quick Share

சென்னை: கைலாசா நாட்டில் மூன்று ஊரைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நித்யானந்தா கூறினார்.

பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவரும், தன்னை தானே சாமியார் என்று கூறிக் கொள்பவருமான நித்யானந்தா, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவாகி விட்டார். அதன்பின்னர், நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருவதாக கூறி வருகிறார். விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று அந்நாட்டின் கரென்சியை அறிமுகம் செய்தார் நித்தியானந்தா. விரைவில் கைலாசாவுக்கு செல்ல விசா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கு நடுவே கைலாசா நாட்டுக்கு செல்ல பல லட்சம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று, மதுரையை சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் கைலாசாவில் உணவகம் அளிக்க அனுமதி அளிக்கவேண்டும் என நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். இந்த நிலையில், நேரலையில் பேசிய நித்யானந்தா, கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமிரா வைத்து தரிசனம் செய்து வருகிறேன். சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசா நாட்டை கண்டுபிடிக்க இயலாது என சிரித்தவாறு தெரிவித்தார்.

Views: - 28

0

0