5 வருடங்களுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு : சைரன் எச்சரிக்கையோடு பாய்ந்தோடிய வெள்ளம்!!
25 November 2020, 12:17 pmசென்னை : நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் நிரம்பும் தருவாயில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் வேகமாக முழு கொள்ளளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
22 அடியை செம்பரம்பாக்கம் நீர் மட்டம் நெருங்கி வருவதால் நண்பகல் 12 மணிக்கு எரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தற்போது உபரி நீர் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது 3 முறை சைரன் ஒலி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் 5 வருடங்களுககு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் அடையாறு வழியே செம்பரம்பாக்கம் நீர் செல்வதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களை நோக்கி அனுப்பும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0