நாடு முழுவதும் விரைவில் 400 ‘வந்தே பாரத்’ ரயில்கள் : மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
12 August 2022, 4:21 pm
Quick Share

சென்னை : நாடு முழுவதும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், முதற்கட்டமாக 75 ரயில்கள் அடுத்த வருடம் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்

சென்னை பெரம்பூர், ஐ.சி.எப்., தொழிற்சாலையில், முதல்முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில், 97 கோடி ரூபாய் செலவில், அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக ரயிலுக்கு, ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். முதற்கட்டமாக புதுடில்லி , வாரணாசி இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாக இருப்பதால், முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 400 ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படும் என மத்திய பட்ஜெட்டிலும் குறிப்பிடப்பட்ட நிலையில், இதில், முதல் கட்டமாக 75 ரயில்களை இயக்க, ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தற்போது தயாராகி வரும் புதிய வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது.

தற்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்படும். வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

160 கி.மீ வேகத்தில் அதிவேகமாக பயணிக்கும் வகையில் உருவாக்கபட்டு வரும் இந்த வந்தே பாரத் ரயில்களில் 102 ரயில்கள் சென்னை ஐசிஎப் தயாரிக்கபட்டு வருகிறது. பல்வேறு நவீன வசதிகள் உள்ள இந்த ரயில்களின் உற்பத்தி பணிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2023 ஆகஸ்டிற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்கிட ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அனைத்து ரயில்வே மண்டலங்களில் உள்ள ‘யார்டு’களிலும், இந்த வகை ரயில்களுக்கான இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, உரிய தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தபட்டு வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயில் 50,000 கிமீ தொலைவிற்கு சோதனை ஓட்டம் செய்ய வலியுறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

Views: - 127

0

0