சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி!!

3 August 2020, 12:09 pm
Karthik Chidambaram - Updatenews360
Quick Share

சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 3 தினங்களாக சற்று குறைந்து காணப்படுகிறது. இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் என அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு எம்பி கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 61

0

0