ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு 2 விருதுகள் : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்..!!

Author: Babu Lakshmanan
26 June 2021, 6:49 pm
eps - updatenews360
Quick Share

சென்னை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு 2 விருதுகள் கிடைத்திருப்பது பெருமையளிப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது 2 ஸ்மார்ட் சிட்டி விருதுகள் சென்னை மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளுக்கும், கொரோனா தொற்று தடுப்பு பணியில் புதிய முயற்சிகளை செயல்படுத்திய காரணத்திற்காகவும் சென்னை மாநகராட்சிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஈரோடும் நல்ல தரநிலையை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஸ்மார்ட்சி சிட்டி திட்டத்தில் சென்னைக்கு விருது கிடைத்ததில் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் 2020 ஆம் ஆண்டிற்கான விருதுகளை மாண்புமிகு அம்மாவின் அரசு பெற்றுள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 210 நீர்நிலைகளை புனரமைத்தல், கொரோனோ தடுப்பு பணிகளில் புதிய முயற்சிகளை செயல்படுத்துதல், காற்று மாசுபடுவதை குறைத்தல், புதைவட கம்பித்தடம் மூலம் மின் விநியோகம் வழங்கல் ஆகிய பிரிவுகளில் சென்னை மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது.

சுற்றுச்சூழல் கட்டமைத்தலில் 3ஆவது இடமும், சிறந்த நகரம் பிரிவின் 4-வது சுற்றில் முதலிடமும் ஈரோடு மாவட்டம் பெற்றுள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 276

0

0