மூத்த தலைகளின் அதிருப்தி எதிரொலி…! தற்காலிக தலைவர் பதவியை தூக்கிப் போட்ட சோனியா..! டெல்லி அரசியலில் பரபரப்பு

23 August 2020, 5:25 pm
Sonia_Gandhi_UpdateNews360
Quick Share

காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது மூத்த தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்ட நிலையில், தற்காலிக தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால தலைவராக கோலோச்சிய சோனியா காந்தி வயது மூப்பு காரணமாகவும், ராகுல் காந்திக்கு தலைமைப் பொறுப்பை வழங்கிடவும் 2017’இல் காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து 2017’இல் தலைமைப் பொறுப்புக்கு ராகுல் காந்தி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகள் மேலும் அதிகரித்த வண்ணமே இருந்தன.

இதற்கு முத்தாய்ப்பாக 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2014’இல் பெற்ற இடங்களை விட குறைவாகப் பெற்று மிக மோசமான நிலையை எட்டியது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சியின் முன்னேற்றத்திற்கு பாடுபடாமல் தங்களையும் தங்கள் குடும்ப வாரிசுகளையும் முன்னிறுத்திக்கொள்ளவே வேலை செய்கிறார்கள் எனக் கூறி, கடந்த வருடம் தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் குழப்பம் நிலவியதை அடுத்து, இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியை நியமனம் செய்தனர். ஆனால் கட்சிக்கு முழுநேரத் தலைவரை நியமிக்காததால் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 23 தலைவர்கள், எழுதியுள்ள கடிதத்தில், ஒரு முழு அளவிலான தலைவரை நியமனம் செய்யாததால், தலைமை மீதான நிச்சயமற்ற தன்மை தொண்டர்களை மனச்சோர்வடையச் செய்து, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தியுள்ளது என்று வாதிட்டனர்.

கட்சிக்கு முழு நேர சுறுசுறுப்பான தலைமை தேவை என்று அவர்கள் வாதிட்டனர். மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் நாளைய சி.டபிள்யூ.சி கூட்டத்தில் முக்கிய விவாதப்பொருளாக இருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த கடிதம் காங்கிரஸ் கட்சியின் 2014 மக்களவைத் தோல்வி குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடைக்கால கட்சித் தலைவராக ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில், தற்காலிக தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகியுள்ளார். இதனால், கட்சியை பலப்படுத்துவதற்காக நாளை நடக்கும் காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அநேகமாக, ராகுல் காந்தியே மீண்டும் தலைவராவார் என்றே தெரிகிறது.

Views: - 36

0

0