தென்மாவட்டங்களில் ஜொலிக்கும் அதிமுக..!! பிரசாந்த் கிஷோர் நடத்திய சர்வே-வின் முடிவால் திமுக தலைமை ‘ஷாக்’!!

18 November 2020, 6:59 pm
prasanth kishor - stalin - updatenews360
Quick Share

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும் என்பது திமுகவின் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் நடத்திய சர்வேயில் தெரியவந்திருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது :- தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் என்றும் என்ற அடிப்படையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் என்றதர்மம் ஜெயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக விற்கு வெற்றி வாய்ப்பு குறித்து திமுகவின் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர், தமிழகத்தை 4 மண்டலமாக பிரித்து முதல் கட்டமாக தென் மாவட்டங்களில் உள்ள 9 மாவட்டங்களில் சர்வே எடுத்து ஆய்வு செய்தார். அதில், அதிமுகவிற்கு மாபெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திமுகவிற்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருப்பது திமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,10,44,358 ஆகும். இதில் ஆண் வாக்காளர்களும் 3,01,12,370 பேரும், பெண் வாக்காளர்கள் 3,09,25,603 ஆகியோர் ஆவார்கள். அதில், வருகின்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் 15 லட்சம் பேர் உள்ளனர். அதேபோல் 20 வயது முதல் 29 வயது வரை ஏறத்தாழ ஒரு கோடியே 20 லட்சம் பேர் உள்ளனர். அதேபோல், 30 வயது முதல் 39 வயது வயது வரை ஏறத்தாழ ஒரு கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர். இப்படி இளைஞர்கள் இரண்டரை கோடி வாக்காளருக்கு மேல் உள்ளனர்.

தென் மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் மதுரை ,தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 1,50,14,857 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர் மட்டும் 7,62,10,109 உள்ளனர். அதுமட்டுமல்லாது, இளைஞர்கள் 35 சதவீதம் பேர் உள்ளனர். ஆக இன்றைக்கு பெண்களும், இளைஞர்களும் யாருக்கு அதிகமாக வாக்குகள் அளிக்கிறார்களோ, அவர்கள் தான் ஆட்சிபீடத்தில் அமர முடியும்.

இதில், பெண்களையும், இளைஞர்களையும் குறி வைத்து எடுத்த சர்வேயில், அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக உள்ளனர். ஆனால், திமுகவிற்கு ஆதரவாக இல்லை என்ற பதில்தான் கிடைத்தது. ஏன், திமுகவுக்கு சாதகமாக இல்லை என்று ஆராய்ந்தபோது, அதில் கிடைத்த தகவலால் அந்தக்குழு மிரண்டு போய் விட்டது.

உலக அளவில் 800 கோடி மக்கள் தொகையில் ஏறத்தாழ 400 கோடி அளவில் பெண்கள் உள்ளனர். இதில், 200 கோடி அளவில் இளைஞர்கள் உள்ளனர். சமீபத்தில்கூட அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் கூட இந்த இரண்டும்தான் தேர்தல் வெற்றியை நிர்ணயித்தனர்.

அமெரிக்கா மட்டுமல்லாது உலக அளவில் அனைத்து நாடுகளிலும் தேர்தலை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் தொடர்ந்து திட்டங்களை வழங்கிய ஒரே அரசு தமிழக அரசாகும். தமிழகத்தில் இதுவரை ஒரு கோடி பெண்களை உறுப்பினராக கொண்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை 65,000 கோடி வரை அதிமுக அரசு கடன் உதவி வழங்கியுள்ளது. வேறு எந்த மாநிலத்துக்கு இதுபோன்ற வழங்கவில்லை.

அதுமட்டுமல்லாது, 1,78,000 உழைக்கும் பெண்களுக்கு இரண்டு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 40,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பவுன் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை, கிராமத்துப் பெண்கள் வாழ்வாதாரம் உயர விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள், மேலும் பெண்கள், ஆண்களுக்கு நிகராக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் இன்றைக்கு 50 சதவீதம் பெண்கள் உள்ளாட்சியில் மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாணவர்கள், இளைஞர்கள் எடுத்துக்கொண்டால், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு பெற 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மசோதா நிறைவேற்றி, அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியது மட்டுமல்லாது, மடிக்கணினி திட்டத்தின் மூலம் 60 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வண்ணம் இரண்டு முறை தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது மட்டுமில்லாது, வெளி நாடுகளுக்குச் சென்று தொழில் முதலீட்டை ஈர்த்து, அதன் மூலம் 11 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழிவகை செய்து மட்டுமல்லாது, இந்த கொரோனா கொடிய வைரஸ் நோய் காலத்திலும், இந்தியாவிலே தொழில் முதலீட்டை அதிக ஈர்த்த மாநிலம் தமிழகம் தான் என்ற வரலாற்றை உருவாக்கி, ஒட்டுமொத்த இளைஞர்களே ஈர்த்த அரசாக அதிமுக அரசு திகழ்கிறது

Cm open bridge- updatenews360

அதுமட்டுமல்லாது, முதலமைச்சர் தென் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தந்திட்டு மட்டுமல்லாது, மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகளை விரைவுபடுத்தியும், 1400 கோடியில் காவிரி குண்டாறு திட்டமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வண்ணம் திட்டப் பணிகளும், 634 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும், சென்னை கன்னியாகுமரியில் தொழில் பெறுவழி சாலையும், அதேபோல் தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க நிலத்தில் பாதியளவு மானியமும், தொழில் தொடங்க மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் 4 லட்சம் குடும்பங்களின் நலன்கருதியே, தனி அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதுபோன்ற முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி 4.2% இருந்தபோதும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.03 அளவில் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தனிநபர் வருமானம் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

தென்மாவட்டம் என்பது இன்றைக்கும் கழகத்தின் கோட்டையாகும். தென் மாவட்டங்களில்தான், 2001 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு தென் மாவட்டத்தின் மகுடமாக விளங்கும் மதுரையில் ஜெயலலிதா நடத்திய ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, முல்லைப் பெரியாறு நதிநீர் வெற்றிகண்ட ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் வெற்றி மாநாடு மதுரையில் நடைபெற்றது.

அதன்பின், தென் மாவட்ட இளைஞர்கள் அதிமுகவின் பக்கம் தான் திரண்டு வருகின்றனர் என்று பல உதாரணங்கள் சொல்லலாம். கழக அம்மா பேரவையின் சார்பில் ஒரு லட்சம் இளைஞர்கள் கொண்ட இளைஞர் எழுச்சி பெருவிழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பங்கேற்றார்.

அதன்பின், ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கழக அம்மா பேரவையின் சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தலைமையில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில், 25 லட்சம் பொதுமக்கள் பங்கேற்றனர். அவரைத் தொடர்ந்து, கழக அம்மா பேரவையின் சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நாடாளுமன்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இதுவரை எந்தத் தலைவர்களும் செய்திடாத வகையில், மாபெரும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் இளைஞர் பட்டாளம் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

Admk Executive- Updatenews360

அதன் தொடர்ச்சியாக, தென்மாவட்டத்தில் நடைபெற்ற நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியை பெற்றது. இதற்கெல்லாம் மேலாக 3 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் தலைநகர் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை தென் மாவட்டத்தின் தலைநகர் மதுரை கொண்டு வந்து, அதை பாரதப் பிரதமர் மூலம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்

அதேபோல், திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் மருத்துவர் கல்லூரிகளையும், அதேபோல் தென்மாவட்டங்களுக்கு வேண்டிய தொழில் நிறுவனங்களையும் கொண்டு வந்து மட்டுமல்லாது, தமிழர்களின் இளைஞர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டுக் கொடுத்து தென் மாவட்ட இளைஞர்களின் நலம் விரும்பும் அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது

இந்த பத்தாண்டுகளில் தென்மாவட்டங்களில் ஜாதி மத கலவரம் இல்லை. அதேபோல், கல்வி விகிதாசாரம் உயர்ந்துள்ளது. வேளாண்மை வளர்ச்சியடைந்துள்ளது. முன்பெல்லாம் தென் மாவட்டங்களில் இருந்து தான் மக்கள் பிழைப்புக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்வார்கள். ஆனால், அப்படி இல்லை இன்றைக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, இன்றைக்கு தென் மாவட்ட இளைஞர்கள் முதலமைச்சர் மீதும், துணை முதலமைச்சர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால், வருகின்ற 2021 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் வழங்குவார்கள். அதேபோல், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

திமுகவை ஒப்பிட்டு பார்க்கும்போது, திமுக ஆட்சி காலத்தில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக, எதிர்க் கட்சியாக தற்போது திமுக இருக்கும்போது, பெண்கள் மீது திமுகவினர் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், திமுக மீண்டும் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

இந்த புள்ளிவிபர கணக்கு கேட்டு திமுக தலைமை மிகவும் அதிர்ச்சி அடைந்து வருகின்ற தேர்தலில் இளைஞர்களையும், பெண்களை கவர திட்டங்கள் தயாரிக்குமாறு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிற்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகி நாம் தேர்தல் அறிக்கையில் வாரிவாரி திட்டங்கள் அறிவித்தாலும், நமக்கு அவர்கள் நாமமே போடுவார்கள் என்று தனது ஆதரவாளரிடம் கூறியுள்ளார்.

1 thought on “தென்மாவட்டங்களில் ஜொலிக்கும் அதிமுக..!! பிரசாந்த் கிஷோர் நடத்திய சர்வே-வின் முடிவால் திமுக தலைமை ‘ஷாக்’!!

Comments are closed.