பராமரிப்பு பணி: சென்னை-கோவை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்….!!

Author: Aarthi
11 October 2020, 7:25 am
1southern railway - updatenews360
Quick Share

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-கோவை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணி காரணமாக நாளை (12.10.2020) மற்றும் வருகிற 14-ந் தேதியில் சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-கோவை வண்டி எண்: 02679 இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் 14-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு பதிலாக, மாலை 4 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

மறுமார்க்கமாக கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் 14-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு பதிலாக மதியம் 3.35 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 34

0

0