’90 சதவீதம் மயக்கநிலையில் இருந்து மீண்டு விட்டார் எஸ்.பி.பி’ : மகன் சரண் வெளியிட்ட புதிய வீடியோ..!

25 August 2020, 5:00 pm
SPB - updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் உடல்நிலை சீரான நிலையில், மீண்டும் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

விரைவில் எஸ்.பி. பாலசுப்ரமணயிம் குணமடைந்து வரவேண்டும் என திரையுலகத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் கூட்டு பிரார்த்தனை நிகழ்த்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீண்டு விட்டதாக தகவல் வெளியான நிலையில், இதனை மறுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டார். தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் வீடியோ மூலமாக தகவலை வெளியுலகிற்கு சொல்லி வருகிறா எஸ்.பி.பி. சரண்.

இந்த நிலையில், தனது தந்தையின் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மகன் எஸ்.பி.பி. சரண் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. தற்போது மயக்க நிலையில் இருந்து 90 சதவீதம் மீண்டு வந்து விட்டார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டிருப்பதால், தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவர்களும் தெரிந்து கொள்வதற்காக, இந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசியுள்ளேன்,” எனக் கூறியுள்ளார்.

Views: - 41

0

0