வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட எஸ்.பி.பி.யின் உடல் : நுங்கம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்க ஏற்பாடு

25 September 2020, 4:02 pm
Quick Share

சென்னை : உடல்நலக்குறைவால் காலமானா பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது விட்டிற்கு எடுத்து வரப்பட்டது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், தொற்றில் இருந்து மீண்டாலும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைய வேண்டும் என்று உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர்.

மீண்டு வந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி.பி.யின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சினிமா பிரபலங்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எஸ்.பி.பி.யின் உடல் எடுத்து வரப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள், பிரபலங்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஞ்சலி செலுத்த வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவும், எஸ்.பி.பி.யின் உடலுக்கு அருகே 25 பேர் மட்டுமே இருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை தாமரைப்பாக்கத்தில் உள்ள விவசாயப் பண்ணையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Views: - 4

0

0