டெல்லி கொடுத்த ஸ்பெஷல் ASSIGNMENT : உடனே இலங்கைக்கு FLIGHT.. களத்தில் இறங்கிய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 1:55 pm
Annamalai - Updatenews360
Quick Share

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை புறப்பட்டு சென்றுள்ளார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று இலங்கை புறப்பட்டு சென்றுள்ளார். இலங்கை தமிழ் எம்பிக்கள் அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தமிழர்கள் வசிக்கும் பகுதி உள்பட பல இடங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட உள்ளார். தனது இலங்கை பயணத்திற்கு பின், நாடு திரும்பும் அண்ணாமலை இலங்கையின் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்குவார் என கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக, இலங்கைக்கு சென்றுள்ளார். தலைநகர் கொழும்புவுக்கு செல்லும் அவர், பல்வேறு இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டு உள்ளார்.

குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டறிய உள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை, பிரதான கட்சிகளான அதிமுக – திமுக, இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக காட்டி வருகின்றன.

இவர்கள் வரிசையில், பாஜகவையும் சேர்க்கும் முயற்சியில், அண்ணாமலை ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சிங்களர்களையும் அண்ணாமலை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, நேரடியாக அங்கு களத்திற்கு செல்ல உள்ளது, அக்கட்சிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

Views: - 672

0

0