ஒரு மாதமாக கொரோனா ‘நஹி’..! ஊரடங்கை விலக்கிய இந்தியாவின் அண்டை நாடு

29 June 2020, 7:46 pm
Quick Share

கொழும்பு: இலங்கையில் முற்றிலுமாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு மாதமாக புதிதாக ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் இலங்கை இருக்கிறது.

ஏப்ரல் 30ம் தேதியில் இருந்து இலங்கையில் சமூகப்பரவல் இல்லை, கடந்த 1ம் தேதியில் இருந்து உயிரிழப்பு ஏதும் இல்லை என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கையில், இதுவரை 2,033 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் . கடைசி உயிரிழப்பு மே 30ம் தேதி நிகழ்ந்திருக்கிறது.

அதன்பின் நாட்டின் பெரும்பகுதியான இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. சில மாவட்டங்களில் மட்டும் கடுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன் பின் இரவு 11 மணியில் இருந்த விடியற்காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது.

பிறகு கடந்த 14ம் தேதியில் இருந்து இரவில் 4 மணி நேரம் மட்டுமே ஊரடங்கு இருந்தது. இப்போது முற்றிலுமாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக இலங்கை அறிவித்துள்ளது.

Leave a Reply