திமுகவில் வெடித்து கிளம்பிய உட்கட்சி மோதல்..! ஆவேசமான ஸ்டாலின்…!

16 August 2020, 8:17 pm
Stalin-06-updatenews360
Quick Share

சென்னை: திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒருவர் ஸ்டாலினை எதிர்த்து கேள்வி கேட்க, கட்சியின் உள்குத்து அரசியல் வெளியில் கசிந்திருக்கிறது.

திமுகவின் உள்கட்சி அரசியல் தமிழகத்தில் ஏக பிரபலம். ஆள்பலம், அதிகார பலம் என பல தருணங்களில் உள்கட்சி அரசியல் கொலைகளில் கூட முடிந்திருக்கிறது. அதிலும் கட்சியின் பதவிகளுக்காக நடக்கும் போட்டிகள் தனி ரகம்.

அண்மையில் அப்படி நடந்த உள்கட்சி அரசியல் விவகாரம் ஸ்டாலினையே கேள்வி கேட்க வைக்க.. கொதித்து போய் இருக்கிறார். சென்னையில் திமுகவில் கட்சியினர் செய்யும் அடாவடிகள் அதிகம். உடன்பிறப்புகளின் இந்த மோதல்கள் அடிக்கடி தலைமை அலுவலகமான அறிவாலயத்திலும் கடுமையாக எதிரொலிக்கும்.

dmk update news360

அப்படி ஒரு லேட்டஸ்ட் சம்பவம் தான் கே.கே. நகரில் அரங்கேறி வரும் உட்கட்சி சண்டை. அந்த பகுதியில் இருப்பவர் தனசேகரன். கட்ட பஞ்சாயத்து, ஆள் பலம், நில ஆக்கிரமிப்பு என வலம் வருபவர். ஏரியாவில் அவ்வளவாக நல்ல பெயர் கிடையாது.

அப்பகுதியில் தம்மை மீறி எதுவும் நடக்கக்கூடாது என்பதில் இப்பவும் கண்ணும், கருத்துமாக இருப்பவர். செல்வாக்கு இருந்தாலும் 2011, 2016ம் ஆண்டு தேர்தலில் எம்எல்ஏ பதவிக்கு நின்று தோற்றவர். அதற்கு அவரது கடந்தகால செயல்பாடுகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இது இப்படி இருக்க கேகே நகர் தெற்கு பகுதி செயலாளராக நியமிக்கப்பட்ட கண்ணன் என்பவருக்கும், தனசேகரனுக்கும் முட்டல், மோதல் எழுந்து இருக்கிறது. பகுதி செயலாளரின் பரிந்துரை இருந்தால் தான் வட்ட செயலாளர் பதவி கிடைக்கும்.

ஆகையால் ஆதரவாளர்கள் உறுதுணை கண்ணணுக்கு இருக்கிறது. அதன் எதிரொலியாக தனசேகரன் ஆட்களுக்கு பதவி கிடைக்காமல் போனது. கண்ணனுடன் இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் கைகோர்க்க, தனசேகரனின் கோபம் அதிகமானதாக கூறப்படுகிறது.

அவரது கோபம் போஸ்டர்களில் காட்டப்பட்டது. அன்பில் மகேஷ் வந்த போது போஸ்டர்களில் கண்ணன் பெயரை தவிர்த்து போஸ்டர் ஒட்டினார் தனசேகரன். தமிழச்சி தங்கபாண்டியன் பெயரையும் போஸ்டரில் அடிக்காமல் கட்சியினருடன் வம்பு செய்திருக்கிறார் என்கின்றனர் உ.பி.க்கள்.

இந்த விவகாரத்தை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தனசேகரன் அடாவடி வேறு ஒரு விஷயத்தில் இருக்கிறது என்று திமுகவினர் கூறுகின்றனர். எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில் கட்சிக்கு ஒரு கட்டடம் உள்ளது. அந்த கட்டடத்தில் ஒரு பகுதியை வாடகைக்கு விட, அதில் கிடைத்த டெபாசிட் தொகையை கொண்டு கட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த தனசேகரன், கணக்கு வழக்குகளை கேட்டு நெருக்கடி கொடுத்தார். ஆனால், அவரது ஆதரவாளர் ஒருவர் கட்சிக்கு சொந்தமான வேறு ஒரு கடையில் 15 ஆண்டுகளாக வாடகை வசூலித்து தராமல் உள்ளார். இதை அவர் கேட்பது இல்லை.

போக, போக இவரது அடாவடி அதிகமாக, கடந்த 5ம் தேதி ஆட்களுடன் வந்து கட்சி அலுவலகத்தில் உள்ள கடையை பூட்டி உள்ளார். கண்ணன் ஆட்கள் வந்து நியாயம் கேட்க, விஷயம் மா. சுப்ரமணியனிடம் போயிருக்கிறது. அவரும் தனசேகரனிடம் பேச, சாவி கொடுக்கப்பட்டு கடை திறக்கப்பட்டு உள்ளது என்கின்றனர்.

dmk_ stalin - updatenews360

இது இப்படி இருக்க… கடந்த 13ம் தேதி சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் காணொலியில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். அப்போது பேசிய தனசேகரன், ராமநாதபுரத்தில் உங்கள்(ஸ்டாலின்) மீது கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். மா.செ பேச்சை மட்டுமே கேட்கிறீர்கள் என்கிற ரீதியில் பேசி இருக்கிறார்.

புகார் சொன்னவர்கள் யார் என்று ஸ்டாலின் பட்டியல் கேட்க… மென்று முழுங்கி சமாளித்து உள்ளார் தனசேகரன். அப்போது கோபத்தின் உச்சிக்கே போன ஸ்டாலின், சம்பந்தமில்லாத மாவட்டங்களை பற்றி பேசுகிறீர்கள்? என்று கடுப்படித்திருக்கிறார். ஸ்டாலின் கோபத்தை கண்டு அப்படியே ஆப் ஆயிருக்கிறார் தனசேகரன்.

Views: - 0

0

0