உள்ளாட்சி தேர்தலில் உள்குத்து : ஸ்டாலின்- துரைமுருகன் திடீர் மோதல்?

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2021, 8:36 pm
Duraimurugan and Stalin- Updatenews360
Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில், அண்மையில் நடந்து முடிந்த ஒன்றியக் குழு தலைவர் தேர்தல், திமுகவுக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது.

ஸ்டாலின் – துரைமுருகனுக்கு இடையே மனக்கசப்பு

அது திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினுக்கும் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரை முருகனுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் மாறி இருக்கிறது.

Cong's Exit Won't Affect Our Vote-bank: As Rift Widens, DMK's Duraimurugan  Hits out at Old Ally

சரி அப்படி என்னதான் ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் நடந்தது?… அமைச்சர் துரைமுருகன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் தனக்குத் தெரியாமல் திமுகவில் எதுவும் நடக்கக்கூடாது என்பதில் மிகவும் கறாராக இருக்கிறார்.

ஆனால் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான காந்தி, திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான தேவராஜ் இருவரும் தங்கள் மாவட்டத்துக்குள் துரை முருகனும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் எம்பியும் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை. எல்லா முடிவுகளையும் கட்சி மேலிடத்தின் ஒப்புதலுடன் தனிப்பட்ட முறையில் எடுத்து வருகின்றனர்.

கட்டுப்பாட்டை மீறிய ஆதரவாளர்கள்

இதுதான், துரைமுருகனுக்கு எரிச்சலைத் தரும் விஷயமாக இருப்பதாக கூறுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தனது கட்டுப்பாட்டில் இருந்த இவர்கள் தற்போது, தன் சொல்படி கேட்காமல், தனிக் கச்சேரி செய்கிறார்களே! என்ற ஆதங்கமும் அவரிடம் உள்ளதாம்.

ஆலங்காயம் ஏற்படுத்திய காயம்

இந்த நிலையில்தான் அண்மையில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தின் 7-வது வார்டு உறுப்பினராக தேவராஜ் எம்எல்ஏவின் மருமகள் காயத்ரி பிரபாகரன் வெற்றி பெற்றார். அதேபோல 6-வது வார்டில் பாரி என்ற திமுக பிரமுகர் மனைவி சங்கீதா பாரி தேர்வானார்.பாரி, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் உள்ள துரைமுருகனின் எஸ்டேட்டை நிர்வகித்து வரும் மேலாளர் என்கிறார்கள்.

Will Durai Murugan be DMK's new General Secretary? | Deccan Herald

ஆலங்காயம் ஒன்றியத்தில் மொத்தம் 18 வார்டுகள் உண்டு. இதில் திமுக வெற்றி பெற்ற வார்டுகள் 11, அதிமுக 4, பாமக 2, சுயேச்சை 1. 18 கவுன்சிலர் பதவிகளில் 11 இடங்களில் வெற்றிபெற்று தனி மெஜாரிட்டியுடன் உள்ள திமுக கவுன்சிலர்களில் ஒருவர்தான் ஒன்றியக்குழுத்தலைவராக தேர்ந்தேடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

எதிர்பார்த்தது ஒன்று நடந்தது ஒன்று

குறிப்பாக மாவட்ட செயலாளர் தேவராஜ் தனது மருமகளை முன்னிறுத்தியதால் காயத்ரி பிரபாகரனே வெற்றி பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக திமுகவைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரான சங்கீதா பாரியும் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற கோதாவில் குதித்தார். இதனால் கடும் போட்டி ஏற்பட்டது.

இது தொடர்பாக, இரு தரப்பினரும் தனித்தனியாக பிரிந்து வெற்றி பெற்ற கவுன்சிலர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள ரகசிய பேச்சில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, காயத்ரி பிரபாகரனுக்கு ஆதரவாக 6 கவுன்சிலர்களும், சங்கீதா பாரிக்கு ஆதரவாக 5 கவன்சிலர்களும் இருந்தனர்.

கவுன்சிலருக்கு பேரம்

காயத்ரி பிரபாகரன் பக்கமுள்ள 6 கவுன்சிலர்கள் தனக்கு ஆதரவு அளிக்காவிட்டாலும் கூட, அதிமுக, பாமக மற்றும் ஒரு சுயேச்சை கவுன்சிலர்கள் மூலம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை எளிதாக கைப்பற்றி விடலாம் என சங்கீதாபாரி கணக்கு போட்டார். அதனால், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் பல லட்ச ரூபாய் பேரம் படிந்துள்ளது, என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த 20-ந்தேதி நடந்தது. உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டு வெளியே வந்த திமுக, அதிமுக கவுன்சிலர்களை தங்களுடன் வருமாறு காயத்ரி பிரபாகரன் தரப்பினரும், சங்கீதா பாரி ஆதரவாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு கையை பிடித்து தங்கள் பக்கமாக இழுத்துள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கோஷ்டி தகராறு முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.

திமுக கவுன்சிலர்களுக்குள் அடிதடி

போலீசார், பொதுமக்கள், முன்னிலையில் திமுக கவுன்சிலர்கள் சட்டையை பிடித்து இழுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். இதில் திமுகவினர் சிலர் காயமும் அடைந்தனர்.

இந்த களேபரத்துக்கு இடையேதான் சங்கீதா பாரியின் ஆதரவாளர்கள், 5 திமுக கவுன்சிலர்கள் மற்றும் எதிர் தரப்பை சேர்ந்த 7 பேரையும் கார்களில் ஏற்றிக்கொண்டு சென்று வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைத்தாக செய்திகள் வெளியானது.

சங்கீதா பாரி வெற்றி

இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மறைமுக தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சங்கீதா பாரி ஒன்றியக் குழு தலைவராக வெற்றி பெற்றார். அவருக்கு 12 ஓட்டுகள் கிடைத்தது.

அதிமுக ஆதரவுடன் தலைவரான பெண்.. திமுக தலைமைக்கு ஷாக் தந்த ஆலங்காயம்..  துரைமுருகன் கொடுத்த பதிலடி | Alangayam Panchayat Union leader sangeetha  suspend from dmk - Tamil Oneindia

தேர்தல் நடந்தபோது தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்த காயத்ரி பிரபாகரன் தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் தேர்தலைப் புறக்கணித்து, சாலைமறியலிலும் ஈடுபட்டார். அப்போது ஒருவர் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பரபரப்பு சம்பவமும் நடந்தது.

மறைமுகமாக துரைமுருகனை தாக்கிய உடன்பிறப்பு

இதுபற்றி காயத்ரி பிரபாகரன் கூறும்போது, “அதிமுக மற்றும் பிற கட்சியினர் ஆதரவுடன் சங்கீதா பாரி வெற்றி பெற்று இருக்கிறார். அதிமுக ஆதரவுடன் பதவி ஏற்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட இழுக்கு” என்று காட்டமாக சாடினார்.

Durai Murugan - Wikipedia

மேலும் ‘திமுகவுக்கு துரோகம் செய்ததாகவும், அதிமுகவுக்கு கைக்கூலியாக மாறியதாகவும் கூறி திமுக ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முனிவேல் மற்றும் ஞானவேல் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காயத்ரியின் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர் தேவராஜ் மூலம் திமுக தலைமைக் கழகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

Duraimurugan alleges murder attempt on son - DTNext.in

அவர்களது, மறைமுக குற்றச்சாட்டு அமைச்சர் “துரைமுருகனும் அவருடைய மகன் கதிர் ஆனந்தும் சேர்ந்துகொண்டு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை தோற்கடித்து விட்டனர்” என்பதாகும்.

அதிர்ச்சியில் திமுக தலைமை

திமுகவில் நடந்த இந்த உள்குத்து வேலைகள், போலீஸ் தடியடி குறித்து அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக செய்திகள் வெளியானது. இது திமுக தலைமையை கடும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.

நிர்வாகிகள் நீக்கம்

திமுக பொதுச் செயலாளர் மீதே குற்றச்சாட்டு எழுந்ததால், இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், சீனியர் அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு மூலம் விசாரணை நடத்தி உண்மை நிலையை தெரிந்து கொண்டுள்ளார். அப்போது மாவட்டச் செயலாளர் தேவராஜின் மருமகள் காயத்ரி கூறிய புகார் உண்மை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து
ஆலங்காயம் ஒன்றிய நிர்வாகிகள் மூவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

TN Assembly polls: DMK's second-rung leaders under siege as cadres lobby  for party tickets- The New Indian Express

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஆலங்காயத்தில் திமுகவினர் இடையே நடந்த மோதல் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளர்களை திமுக பொதுச் செயலாளர் என்கிற முறையில் துரைமுருகனே இடைநீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருப்பதுதான்.

தனது ஆதரவாளரை தானே நீக்கிய துரைமுருகன்

திமுக தலைமைக் கழகம் சார்பில் முரசொலியில் கட்டம் கட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், “ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.எம். முனிவேல், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வி.எஸ்.ஞானவேலன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் பாரி ஆகியோர் கழக கட்டுப்பாட்டையும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

Duraimurugan and Baalu to be new GS and Treasurer of DMK | Deccan Herald

இது திமுக வட்டாரத்தில் மிகவும் வியப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் திமுக வரலாற்றில், தனது ஆதரவாளர்களையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக பொதுச்செயலாளர் தற்காலிக நீக்கம் செய்திருப்பது, இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “திமுகவின் சீனியர் தலைவரான துரைமுருகன் கடந்த 2 ஆண்டுகளாகவே வேலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவற்றிலும் அதிகாரம் செலுத்துவதை திமுகவினரே விரும்பவில்லை. அதுவும் அவருடைய மகனை எம்பி ஆக்கிய பிறகு இது அதிகமாகிவிட்டது. கதிர் ஆனந்துக்கு கட்சியில் செல்வாக்கை உருவாக்க வேண்டும் என்பதற்காக துரைமுருகன் மிகவும் பிரயத்தனப்படுகிறார். ஆனால் அதற்காக அவர் கையாளும் முறைதான் மிகக் கடுமையாக உள்ளது.

ஆலங்காயம் பிரச்சினையைப் பொறுத்தவரை கதிர் ஆனந்த் எம்பி, முழுக்க முழுக்க திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக தனது ஆதரவாளரை நிறுத்தி வெற்றி பெற வைத்து இருக்கிறார். அதற்காக அதிமுக, பாமக கவுன்சிலர்களையும் அவர் வளைத்து போட்டிருக்கிறார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் துரைமுருகனுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்று திமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதையும் மீறி ஸ்டாலின் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இப்படி கட்சிக்குள் இருந்த எதிர்ப்பால்தான் இந்தமுறை தட்டுத்தடுமாறி துரைமுருகன் வெற்றி பெற்றார் என்று திமுகவினர் கூறுகின்றனர்.
இதை அவர் புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை.

9 மாவட்ட உள்ளாட்சி தலைவர் பதவி மறைமுக தேர்தல்.. பெரும்பாலான பதவிகளை  மொத்தமாக அள்ளிய திமுக! | Tamilnadu Local Body Election: Indirect election  for chairman and vice-chairman ...

தனது ஆதரவாளர்களையே துரைமுருகன் நீக்குகிறார் என்றால் கட்சியின் தலைவருக்கும், அவருக்கும் மறைமுக மோதல் இருக்கிறது என்றுதான் அர்த்தம். மேலும் துரைமுருகன் சமீபகாலமாக கட்சி நிர்வாகிகளிடம் நடந்து கொள்ளும் விதம் திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் மோதல்?

இதுகுறித்து அறிவாலயத்திற்கு ஏகப்பட்ட புகார் கடிதங்களை திமுகவினர் அனுப்பியுள்ளனர். அதனால்தான் துரைமுருகனின் ஆதரவாளர்கள் மூவரை துரைமுருகனை வைத்தே கட்சியிலிருந்து தற்காலிகமாக கட்டம் கட்டும் நிலையை ஸ்டாலின் உருவாக்கிவிட்டார்.

Led by MK Stalin. The DMK, General Committee: Duraimurugan elected General  Secretary and DR Balu elected Treasurer || மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.  பொதுக்குழு: பொதுச்செயலாளராக துரைமுருகன் ...

இதே திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு யாராவது துரோகம் செய்தால் அவர்களை 24 மணி நேரத்தில் கட்டம் கட்டுவேன் என்று தேர்தல் நடப்பதற்கு முன்பு துரைமுருகன் எச்சரித்திருந்தார். இப்போது அவர் தனது ஆதரவாளர்களையே கட்டம் கட்டி இருக்கிறார் என்பதுதான் இதில் வேடிக்கை!” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 486

0

0