‘ஒழுங்கு நடவடிக்கையையே ஒழுங்கா எடுக்க தெரியல’ : ஸ்டாலினை கிழித்துதொங்க விட்ட நெட்டிசன்கள்!!

5 August 2020, 7:55 pm
MK STalin - updatenews360
Quick Share

தி.மு.க., எம்.எல்.ஏ., கு.க. செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையால், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நெட்டிசன்களிடம் சிக்கி படாதபாடு பட்டு வருகிறார்.

தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதியின் அரசியல் தர்பாரால் தி.மு.க.வில் பல்வேறு மூத்த தலைவர்கள் தற்போது அதிருப்திக்குள்ளாகி வருகின்றனர். அந்த வரிசையில் பாதிக்கப்பட்டவர்தான் ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம். தலைமையின் அதிருப்தியால் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது.

அதன்படியே, அவரும் நட்டாவை சந்தித்து பேசினார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கு.க. செல்வம், திமுக மீதான குறைகளை பட்டியலிட்டார். மேலும், இந்து கடவுகளை அவதூறு செய்தவர்களையும் அவர் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

Stalin-06-updatenews360

இதனால், அதிருப்தியடைந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, எம்.எல்.ஏ. கு.க. செல்வத்தை இடைநீக்கம் செய்வதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இப்போ, நெட்டிசன்களிடம் விவாதத்திற்கு வந்திருப்பது ஸ்டாலினின் நடவடிக்கை பற்றி அல்ல. அவர் வெளியிட்ட அறிக்கைதான் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

ஆம், சாதாராண பேச்சில் பிழை இருந்தாலே, நோண்டி நொங்கெடக்க நெட்டிசன்கள் தயாராக இருக்கும் நிலையில், தற்போது வெறும் வாயிக்கு அவுள் கொடுத்தாற் போல் ஆகிவிட்டது.

தமிழ் மொழிக்கான கழகம், தமிழுக்கு செம்மொழி விழாவை நடத்திய கழகம், தமிழின் அடையாளமான திகழ்ந்த கருணாநிதி கழகம் என தமிழ் மொழியினால் மட்டுமே பல்வேறு புனைப் பெயர்களை கொண்ட தி.மு.க.விற்கு, அக்கட்சியின் தலைமை வெளியிட்ட அறிக்கையில் பிழை ஏற்பட்டிருப்பதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“நல்லவேலை கலைஞர் இல்லை…. ஒழுங்கு நடவடிக்கையையே ஒழுங்கா எடுக்க தெரியல…” என ஒருவர் கருத்து வெளியிட்டு, கடிதத்தில் இருக்கும் பிழையை சுட்டிக் காட்டியள்ளார்.

மற்றொரு நெட்டிசன்னோ ஒருபடி மேலே சென்று, கழுவி கழுவி ஊற்றியுள்ளார்.

Views: - 13

0

0